×

ஒட்டன்சத்திரத்தில் முப்பெரும் கண்காட்சி

ஒட்டன்சத்திரம், பிப். 28: ஒட்டன்சத்திரத்தில் பிளாஸ்டிக் மாற்றுப்பொருள், அறிவியல், இயற்கை விதை ஆகிய முப்பெரும் கண்காட்சி பழநி ஸ்ரீ சுப்பிரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் நடைபெற்றது. செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். முதல்வர் நந்தகுமார் வரவேற்புரையாற்றினார். காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரன் கலந்துகொண்டு 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிளாஸ்டிக் மாற்றுப்பொருள் கண்காட்சியை திறந்து வைத்தார். இயற்கை விவசாயி நம்மாழ்வர் மற்றும் நெல் ஜெயராமன் சீடர்கள் அமைத்திருந்த விதை கண்காட்சியில் 450 வகையான நெல்விதைகள் இடம் பெற்றன.

கண்காட்சியில் ஆகாய தாமரையில் இருந்து உரம், எண்ணை மருந்துபொருட்கள் தயாரித்தல், கலங்கிய தண்ணீரை தூய்மையாக மாற்றுதல், நிலநடுக்கம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. ஏற்பாடுகளை வர்த்தக சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியன், வெங்கிடாசலம், ஹபிபுல்லா, மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தங்கவேல், ராசியப்பன், அரிமா ரோட்டரி சங்க நிர்வாகிகள், செயல் அலுவலர் சிவக்குமார், பேராசிரியை சித்ராதேவி ஆகியோர்  செய்திருந்தனர்.

Tags : exhibitions ,Ottangara ,
× RELATED இந்த வார விசேஷங்கள்