×

வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

வடமதுரை, ஜூன் 12: வேடசந்தூர் அருகேயுள்ள மொங்குபெத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (22). இவர் கரூர் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த போது, அதே கல்லூரியில் படித்த கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ராஜேஸ்வரி (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதற்கு இருதரப்பும் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் எரியோடு அருகே கோயிலில் திருமணம் செய்து கொண்டு, பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை தஞ்சமடைந்தனர். இதையடுத்து, இருவரது பெற்றோரையும் போலீசார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

The post வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Vadamadurai Police Station ,Vadamadurai ,Prashanth ,Mongubethanpatti ,Vedasandur ,Karur Private Engineering College ,Rajeshwari ,Gopichettipalayam ,
× RELATED மின்சாரம் தாக்கி சிறுவன் பலி