×

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவர் கைது

கொடைக்கானல், ஜூன் 10: கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும் மற்றும் சிறுவர்களையும் குறி வைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த உசைன் மகன் பகத் (36), பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவஜ் ஆகிய இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்களை சோதனையிட்டதில் இருவரிடமும் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்தது தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

The post கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Tamil Nadu ,
× RELATED கொடைக்கானலில் மலை கிராமத்தில்...