×

விடுதி மாணவர்களுக்கு வழிகாட்டி கருத்தரங்கம்

விழுப்புரம், பிப். 27: விழுப்புரம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்சார்பில் அரசு பள்ளி விடுதி மாணவ, மாணவிகளுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது. இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன் வரவேற்றார். போட்டி தேர்வுகள் குறித்து சிகரம் பயிற்சி மையம் கணபதி பேசினார். வேலைவாய்ப்பு உதவி இயக்குநர் பாஸ்கரன் ஆளுமைத்திறன் வளர்த்தல் குறித்து பேசினார். உயர்க்கல்வி மற்றும் தனியார்துறை வேலைவாய்ப்பு குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் பேசினார். உதவியாளர் ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

Tags : accommodation students ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை