×

மரக்காணம் அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மரக்காணம், பிப். 27: மரக்காணம் அருகே கடற்கரை ஓரம் உள்ள தீர்த்தவாரி பகுதியில், டிராக்டரில் மணல் கடத்துவதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ஒரு டிராக்டரில் மர்ம நபர்கள் மணல் கடத்தினர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதை தொடர்ந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து மரக்காணம் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர் விசாரணை நடத்தி, டிராக்டர் உரிமையாளர் மரக்காணம் பகுதியை சேர்ந்த நடராஜ்(40) என்பவரை கைது செய்தனர்.

Tags : sand storm ,Marakkanam ,
× RELATED மரக்காணம் அருகே கரையை கடக்கும் நிவர்