×

கோழிகள் வளர்ப்பு திட்டத்தில் பயனாளிகள் சிறப்பான பராமரிப்பு செய்து பொருளாதாரத்தில் முன்னேறலாம் உதவி இயக்குனர் அறிவுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, பிப்.27: கோழிகள் வளர்ப்பு திட்டத்தில் பயனாளிகள்  சிறப்பான பராமரிப்பு செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என உதவி இயக்குனர் அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின்  கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பெண்களுக்கு  நாட்டுக் கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மன்னார்குடி கால்நடை துறை உதவிஇயக்குனர் டாக்டர் ஜான்சன் சார்லஸ் தலைமை வகித்தார். பயனாளிகளுக்கு  நாட்டுக்கோழிக்குஞ்சுகளை வழங்கி  அவர் பேசுகையில், ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தில் தமிழ்கத்தில் 385 ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 200 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ 75 மதிப்பில் தரமான நாட்டு கோழி குஞ்சு ஒரு பெண் பயனாளிக்கு தலா 50 குஞ்சுகள் வழங்கப்படுகிறது. பயனாளிகள் அனைவருக்கும் கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் தொழில் நுட்ப பயிற்சியில் கோழிகள் பராமரிப்பு, தீவனம், தண்ணீர் வழங்கும் முறை, சத்தானதீவனம் அளித்தல், நோய்தடுப்பு முறைகள் குறித்து விரிவான பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தலா ஒருவருக்கு ரூ.150 கொடுக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கோழிகளை பாதுகாப்பாகஅடைப்பதற்கு கூண்டு அமைக்க ஒவ்வொரு பயனாளிக்கும் அவரவர் வங்கிகணக்கில் ரூ 2,500  செலுத்தப்படுகிறது.

வளர்க்கப்படும் கோழிக்குஞ்சுகள் 21 முதல் 25 வாரவயதிற்குள் முட்டையிட துவங்கும். இம்முட்டைகள்விற்பதன் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ 5,000 முதல் ரூ 7000 வரை லாபம் கிடைக்கும். ஒன்றரை ஆண்டுகள்கழித்து இறைச்சிக்காகஇந்த நாட்டுக் கோழிகள்விற்பனை செய்வதன் மூலம் ரூ 10,000 முதல் ரூ 15,000 வரைலாபம் கிடைக்கும். பயனாளிகள் கோழிகள் வளர்ப்பு திட்டத்தில் சிறப்பான பராமரிப்பு செய்து பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும், இதன்படி நேற்று திருத்துறைப்பூண்டி ஒன்றியத்திலுள்ள  32  ஊராட்சிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு நபர் ஒன்றுக்கு 50 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது. இதே போன்று மன்னார்குடி, கோட்டூர் ,நீடாமங்கலம், முத்துப்பேட்டை  உட்பட 5 ஒன்றியங்களில் 1000 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார். இதில் கால்நடை மருத்துவர் டாக்டர் ராமலிங்கம்,  உதவி  கால்நடைமருத்துவர்கள்,  மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Helpers ,help director ,
× RELATED திருநெல்வேலி பாஜ வேட்பாளர் நயினார்...