×

தேன்கனிக்கோட்டையில் 35 கண் காணிப்பு கேமரா

தேன்கனிக்கோட்டை, பிப். 27: தேன்கனிக்கோட்டையில், குற்றங்களை தடுக்க 35 கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்பி திறந்து வைத்தார். தேன்கனிக்கோட்டையில், குற்றங்களை தடுக்க பொதுமக்கள் பங்களிப்புடன் பஸ் ஸ்டாண்ட்,எம்.ஜி ரோடு, தர்கா ரோடு, ஒசூர் ரோடு, கோட்டை வாசல், நேதாஜி ரோடு, ராஜாஜி தெரு, கெலமங்கலம் ரோடு உள்ளிட்ட நகரின், முக்கிய பகுதிகளில் 35 கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளது. இதன் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை பழைய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி பண்டிகங்காதர் நேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட வன அலுவலர் தீபக்பில்ஜி, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, சிவலிங்கம், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜனகிராமன், தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். கட்டுபாட்டை அறையில் 24 மணி நேரமும் கண் காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருவார்கள். இதனால் நகரில் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி பண்டிகங்காதர் தெரிவித்தார்.

Tags :
× RELATED மது விற்ற 2 பேர் கைது