×

வைராவிகுளத்தில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

நெல்லை, பிப். 27:  அம்பை அருகே வைராவிகுளத்தில் அமையவுள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.அம்பை அருகே ஆலடியூரை சேர்ந்த ராமையா என்பவர் தலைமையில் அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் அளித்த மனு: அம்பை அருகே வைராவிகுளத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மதுபான கடை அமையவுள்ள இடம் ஆலடியூர், தெற்கு பாப்பான்குளம், அயன்சிங்கம்பட்டி, ஜமீன்சிங்கம்பட்டி, மணிமுத்தாறு, வைராவிகுளம் ஆகிய இடங்களுக்கு மத்தியில் உள்ளது.

இதனருகே விளைநிலங்கள், வைராவிகுளம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆதிபராசக்தி கோயில் உள்ளிட்டவை உள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருவோர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவர். கழிவுப்பொருட்கள், மதுபாட்டில்கள் விளைநிலங்களில் வீசப்படும் அவலமும் உள்ளது. அவ்வழியாக அம்பை, கல்லிடைக்குறிச்சி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாவர். எனவே அந்த டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்து வேறிடத்தில் அமைத்திட கலெக்டர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : shop ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி