×

தர்மபுரியில் பாஜ ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, பிப்.26: தர்மபுரியில் நகர பாஜ நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சரவணன் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அனந்தகிருஷ்ணன், பிற்பட்டோர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சூர்யா, நகர பொதுச்செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், தர்மபுரியில் ஆட்டோ ஓட்டுநர்களை தாக்கியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தர்மபுரியில் நடந்து வரும் கந்து வட்டி கொடுமைகளை போலீசார் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தர்மபுரி நகரில் முதியோர் காப்பகத்தில் உள்ளவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். தமிழக அரசு 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் உரிய முறையில் கணக்கெடுத்த தகுதியான அனைவருக்கும் நிதியுதவி கிடைக்க செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : meeting ,Bhaj Advani ,Dharmapuri ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...