×

உத்தமபாளையம் பேரூராட்சியில் சுகாதாரத்தை வலியுறுத்தி மாணவர்கள் ஊர்வலம்

உத்தமபாளையம், பிப்.26:  உத்தமபாளையம் பேரூராட்சியில் சாலையோரங்களில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் சிறப்பு தூய்மை முகாம் நடைபெற்றது. உத்தமபாளையம் பேரூராட்சியில் 18வார்டுகள் உள்ளன. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பேரூராட்சிகளிலும் தூய்மை முகாம் நடத்திட உத்தரவிடப்பட்டு இருந்தது. இதன்படி உத்தமபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட உத்தமபாளையம் பிடிஆர் காலனி  மாநிலநெடுஞ்சாலை மற்றும் உ.புதூர், களிமேட்டுப்பட்டி சுகாதார வளாகத்தில் தேங்கி கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், மக்கும், மக்காத குப்பைகள் அகற்றப்பட்டன.

பேரூராட்சி செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்த சிறப்பு தூய்மை முகாமில் 80க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் கருணாகரன், மேற்பார்வையாளர் சகாயராஜா மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து உத்ததமபாளையம் அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. இதில் முக்கிய வீதிகள் வழியாக மாணவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

Tags : Uthamapalayam ,procession ,
× RELATED காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில்...