×

மேல்மலையனூரில் மாசி பெருவிழா அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை

செஞ்சி, பிப். 20: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசி பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் கோயில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசி பெருவிழா நடைபெறுவது வழக்கம். வரும் மார்ச் 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவிற்கு முன்னேற்பாடுகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் ஆலோசனை நடத்தினார். அப்போது குடிநீர், கழிவறை, போக்குவரத்து, காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகள் பொதுமக்களுக்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியது குறித்தும் விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, திண்டிவனம் சார் ஆட்சியர் மெர்சி ரம்யா, மேல்மலையனூர் தாசில்தார் பரமேஸ்வரி, மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலுச்சாமி, செஞ்சி டிஎஸ்பி முகிலன் மற்றும் தீயணைப்புத் துறை, காவல்துறையினர், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ், மோகனசுந்தரம் அறங்காவலர்கள் கணேசன், சரவணன், ஏழுமலை, மணி, ரமேஷ், சேகர், செல்வம் மற்றும் பலர் கலந்து
கொண்டனர். இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், பொதுமக்கள் துறை சார்ந்த பதிவுகளை செய்கிறார்களா என ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Tags : ruler ,festival celebrations ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...