×

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க நடவடிக்கை

விழுப்புரம், பிப். 13:  விழுப்புரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சென்னைக்கு அடுத்த
படியாக முக்கிய ரயில் நிலையமாக விழுப்புரம் திகழ்கிறது. நாட்டின் தலைநகரான டெல்லி மற்றும் முக்கிய நகரங்களாக கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஒடிசா, பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களுக்கும் இங்கிருந்து ரயில் வசதி கொண்டுள்ளது. மேலும் சென்னை, நெல்லை, மதுரை மற்றும் கேரளாவிற்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை உள்ளது. அருகில் உள்ள வேலூர், புதுச்சேரி, கடலூர், திருக்கோவிலூர், திருவண்ணாமலை ேபான்ற மாவட்டங்
களுக்கு காலை, மாலை ேவளைகளில் பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் விழுப்புரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். முகூர்த்த நாட்கள், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை முடிந்து திங்கட்கிழமைகளில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்.இதனிடையே, தற்போது விழுப்புரம் ரயில் நிலையம் ரூ.25 கோடியில் புதுப்பிக்கப்பட்டு ‘ஏ’ கிரேடு தரத்தில் உள்ளது. இருப்பினும் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என பயணிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தில் 4 டிக்கெட் கவுண்டர்கள் உள்ள நிலையில், 2 டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமே செயல்படுகிறது. இதனால் அவசரத்திற்கு கூட டிக்கெட் எடுத்துச்செல்ல முடியாமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. குறிப்பாக ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கட்கிழமைகளில் இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.கடந்த சில நாட்களாக அதிகாலையிலேயே சென்னை, வேலூர் மற்றும் மதுரை மார்க்கம் செல்லும் ரயில்களுக்கு டிக்கெட் எடுக்க ஏராளமான பயணிகள் குவிந்தனர். ஆனால் 2 டிக்கெட் கவுண்டர்கள் மட்டுமே திறந்து இருந்ததால், பலர் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். அதற்குள் சென்னை செல்லும் ரயில் வந்ததால் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செல்லும் நிலை ஏற்பட்டது. பலர் திரும்பிச்சென்று பேருந்து மூலம் செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, திங்கட்கிழமை மற்றும் விழா காலங்களில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறந்து டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Villupuram ,railway station ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...