×

மாவட்ட செஸ் போட்டி எஸ்இஎஸ் மாணவர் முதலிடம்

கோவை, பிப்.6: கோவையில் ரங்கநாதன் நினைவு செஸ் போட்டி மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
 தொடர்ந்து 2வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டியில், மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டி 8,12,15 மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 5 புள்ளிகளுடன் எஸ்.இ.எஸ் பள்ளி மாணவர் முதலிடம் பிடித்தார். 12 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கோபால் நாயுடு பள்ளி மாணவர் சர்வேஷ் ஆதித்யா 4.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி வசந்தி 5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார்.
8 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சின்மயா பள்ளியை சேர்ந்த விஷ்வேஸ்வரா 5 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags : district chess competition ,student ,SES ,
× RELATED சென்னை திருநின்றவூரில் வெயிலின்...