×

மோகன் குமாரமங்கலம் காங். செயல் தலைவராக நியமனம் சேலத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சேலம், பிப்.6: காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டதையடுத்து ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவித்து சேலத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவராக சேலத்தை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நியமித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்திக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சேலத்தில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்றிரவு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேசன், ஜெயராமன், ஜெயரத்தினம், ரகுராஜன்  ஆகியோர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதில் நிர்வாகிகள் வக்கீல் கார்த்திக், பாபுலால், கார்த்திக், கமலகண்ணன், வெங்கடேஷ், ரவிகுமார், கவுதம். சக்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Mohan Kumaramangalam Kang ,Chairperson ,
× RELATED திருத்துறைப்பூண்டி அரசு பள்ளி ஆண்டு விழா