×

திருப்பட்டூரில் பராமரிப்பு இல்லாத கழிப்பறை பக்தர்கள், பொதுமக்கள் அவதி

மண்ணச்சநல்லூர், பிப்.6: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பட்டூரில் பராமரிப்பு இல்லாத கழிப்பறையால் பொதுமக்கள், பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பட்டூர் கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் தலைஎழுத்தை பிரம்மா மங்களகரமாக மாற்றியமைக்கும் தன்மைபடைத்தவர் என்பது பக்தர்கள் நம்பிக்கை. திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு தினமும் வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வார்கள். இங்கு கடந்த 2014-15ம் ஆண்டில் ஒன்றிய பொது நிதியில் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இது  பராமரிப்பு இன்றி உள்ளதால்  உள்ளூர் மக்கள் மற்றும் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கழிவறை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த கழிப்பறையை சீரமைத்து வெளியூர் பக்தர்கள் மற்றும் உள்ளுர் பொதுமக்களின் நலன் காக்க வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : toilet devotees ,
× RELATED திருச்சி மாவட்டம் மணப்பாறையில்...