×

சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’: மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி

திருச்சி, ஜூன் 25: லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பணியாளாிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறித்த இரண்டு சாித்திரபதிவேடு ரவுடிகள் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று உத்தரவிட்டார். திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட விஸ்வாஸ் நகா் 2ம் தெருவுக்கு அருகில், பழைய பால்பண்ணை சாவீஸ் சாலை சந்திப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி இரவு லாரி புக்கிங் ஆபீஸில் வேலை பார்க்கும் பணியாளா் நடந்து சென்று கொண்டிருந்த போது, இரண்டு பேர் அரிவாளை அவர் கழுத்தில் வைத்து மிரட்டி, ₹5 ஆயிரம் ரொக்கத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் வரகனோி பகுதியை சோ்ந்த பாபு (எ) மிட்டாய் பாபு (30), மற்றும் காமராஜ் நகரை சோ்ந்த தேவா (30) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தொிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசார் நடத்திய மேல் விசாரணையில் ரவுடி பாபு (எ) மிட்டாய் பாபு மீது காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலைய எல்லையில் ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு, 2 கஞ்சா வழக்குகளும், ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கு, ஒரு திருட்டு வழக்கும், பாலக்கரை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தொிய வந்தது. மற்றொரு ரவுடியான தேவா மீது காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட எல்லையில் கஞ்சா விற்பனை செய்ததாக 5 வழக்குகளும், 5 அடிதடி வழக்குகளும், 2 வழிப்பறி வழக்கும், ஒரு கஞ்சா வழக்கும், கோட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு அடிதடி வழக்கும் என மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தொிய வந்தது.

இந்த ரவுடிகளின் தொடர் குற்ற நடவடிக்கைளை தடுக்கும் வகையில் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையை பாிசீலனை செய்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாபு (எ) மிட்டாய் பாபு மற்றும் தேவா ஆகியோர் மீது குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இருவர் மீதும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், அதற்கான ஆணையை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாபு மற்றும் தேவா ஆகியோரிடம் சார்வு செய்தனர். மேலும் திருச்சி மாநகாில் ஆயுதங்களுடன் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கடுமையாக எச்சரித்துள்ளார்.

The post சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’: மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Dinakaran ,
× RELATED சிறையில் திருநங்கைக்கு பாலியல்...