×

நாகூர் ஆண்டவர் தர்காவில் மினரா உச்சியில் ஏற்றிய பாய்மரம் உடைந்து சேதம்

நாகை, பிப்.6: நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் 462ம் ஆண்டு கந்தூரி திருவிழா இன்று 6ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.
 தர்காவில் சுமார் 80 அடி உயரத்திற்கு 5 மினராக்கள் உள்ளது. இந்த மினராவில் கொடி ஏற்ற பாய் மரம் என்ற கொடி மரம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 2ம் தேதி ஏற்றப்பட்டது.இந்நிலையில் இன்று அந்த பாய் மரத்தில் கொடி ஏற்ற இருந்த நிலையில் நேற்று முன்தினம் பாய் மரப்பகுதி உடைந்து மினரா உச்சி பகுதி கட்டிடம் இடிந்து விழுந்தது. இதனால் நாகூர் தர்காவில் பரப்பரப்பு எற்பட்டது. மினராவின் உச்சி பகுதி இடிந்து விழுந்த தரை பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் நடைபெற வில்லை. இதையடுத்து தர்கா நிர்வாகம் மீண்டும் சேதம் அடைந்த
பகுதியை சீரமைத்து வருகின்றனர்.

Tags : Nagara ,Lord ,minaret climbing ,
× RELATED தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 25 கிலோ பறிமுதல்