×

ஜெயங்கொண்டத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 22: ஜெயங்கொண்டத்தில் அரசன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்பு கேரி பேக் விற்பனை செய்யப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் ஜெயங்கொண்டத்தில் கடைவீதியில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப் மற்றும் கேரி பேக் விற்பனை செய்யப்பட்டது கண்டறிந்து விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின்போது துப்புரவு ஆய்வாளர் மணிவண்ணன் , களப்பணி உதவியாளர் விஜயகுமார், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் ரவி,காளிமுத்து, தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ரேகா, கலையரசி, உமாதேவி, ஜோதி, ஜோதிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. பிளாஸ்டிக், கேரி பேக்குகள் , டீ கப்புகள் நகராட்சி அலுவலகத்தில் கொண்டு வந்து ஆணையர் முன்னிலையில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு MCC மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது .

The post ஜெயங்கொண்டத்தில் பிளாஸ்டிக் பைகள் விற்ற கடைகளுக்கு அபராதம் appeared first on Dinakaran.

Tags : Jayangondal ,JAYANGONDAM ,Asokumar ,Jayangondai ,
× RELATED குடும்ப தகராறில் இளம்பெண் மாயம்