×

கண்டும் காணாமல் இருக்கும் ேபாலீஸ் பர்மா பஜாரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை அமோகம் நடவடிக்ைக எடுக்க வலியுறுத்தல்

தஞ்சை, பிப். 5:  போலீசார் பணத்தை பெற்று கொண்டு கண்டும் காணாமல் இருப்பதால் தஞ்சை பர்மா பஜாரில் புதுப்பட சி.டி.க்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை நகரின் மைய பகுதியாக இருப்பது பழைய பேருந்து நிலையம். இதன் அருகே கீழவாசல் செல்லும் சாலையில் பர்மா பஜார் உள்ளது. 200க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ள இப்பகுதியில் பெரும்பாலான கடைகளில் செல்போன் விற்பனை, எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை, வெளிநாட்டு பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட கடைகளில் சிடி விற்பனை நடக்கிறது. பொதுவாக சிடி விற்பனை கடைகளில் பழைய படம் அல்லது திரைக்கு வந்த பல வருடங்களான சிடிக்கள், எம்பி 3 சிடிக்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இக்கடைகளில் பழைய பட சிடிக்களை பொதுமக்கள் பார்வையில் படுமாறு வைத்துவிட்டு மறைமுகமாக திரைக்கு வந்து சில நாட்களே ஆன புதுப்பட சிடிக்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. ரூ.30 முதல் ரூ.50 வரை திரைக்கு வந்த நாட்களை கணக்கில் வைத்து புதிய படங்கள் அடங்கிய சிடி விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு போலீசாரின் கடுமையான கட்டுப்பாடுகளால் கடைகாரர்களுக்கு தெரிந்தவர்கள் சென்றால் தான் இதுபோன்ற சிடிக்களை விற்பனை செய்வர். தற்போது “தேவையானதை” போலீசாருக்கு வெட்டி விட்டதால் தைரியமான, வெளிப்படையான விற்பனை நடந்து வருகிறது. எனவே யார் வேண்டுமானாலும் சென்று புதுப்பட சிடியை பணம் கொடுத்து வாங்கி கொள்ளலாம். புதுப்படங்கள் சிடி விற்பனையைவிட மெமரி கார்டில் காப்பி செய்து விற்பனை செய்யும் வணிகத்திலேயே அதிக லாபம் கிடைப்பதாக கூறப்படுகிறது. மெமரி கார்டில் காப்பி செய்ய பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களே வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, இத்தொழில் இப்பகுதியில் பல ஆண்டுகளாக கொடிகட்டி பறக்கிறது. இதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் முதல் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் வரை மாதாமாதம் முறையாக மாமூல் வழங்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொரு கடையிலும் மாதாமாதம் வசூல் செய்து இத்தொகைகளை வழங்கிவிடுவதால் எந்த இடையூறின்றி தொழில் நடக்கிறது என்றார்.
பல கோடி ரூபாயை முதலீடு செய்து திரைப்படம் எடுப்போர் பெரியளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு தொழிலை அழித்து மற்றொரு தொழில் நடந்து வருவது வருந்தத்தக்கது. எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Burma Bazaar ,
× RELATED கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி...