×

ஒரத்தநாட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

ஒரத்தநாடு, ஜன.10: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வரும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக 45 மாணவிகளுக்கு அரசின் இலவச சைக்கிளை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது கனி தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுராதா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரவி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன், பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலர் ரமேஷ் மற்றும் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்கள் உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமானோர கலந்து கொண்டனர்.

 

Tags : Orathanadu ,Orathanadu Government Girls Higher Secondary School ,Thanjavur ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி