×

பூதலூர் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருக்காட்டுப்பள்ளி, ஜன.10: பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. திருக்காட்டுப்பள்ளி அருகே பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் முத்தமிழ்செல்வன் (போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மன்ற செயலாளர்), இளையராஜா (போதைப்பொருள் விழிப்புணர்வு மன்ற இணை செயலாளர்) ஆசிரியர்கள் பரமசிவம், பிரபாகரன், பாலமுருகன், ஆர்.வி.எஸ்.விவசாய கல்லூரி மாணவிகள் முன்னெடுப்பில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இந்த போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

 

Tags : Drug Prevention Awareness Rally ,Puthalur Government School ,Thirukattupalli ,Puthalur Government Boys’ ,Higher ,Secondary School ,Puthalur Government ,Boys’ Higher ,Principal ,Arokiasamy ,Assistant Principal ,Muthamizhselvan ,Drug Prevention Awareness… ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி