×

அங்கன்வாடி கட்டடம் புதுப்பிப்பு

கோவை, பிப். 5:  கோவை மாநகராட்சி வார்டு எண் 69-க்கு உட்பட்ட புலியகுளம் பெரியார் நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் இந்த கட்டிடத்தின் பழுதினை நீக்கி புதியதாக ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்டும் பணிகளை மாநகராட்சியுடன் இணைந்து, தனியார் அறக்கட்டளை மற்றும் தனியார் இன்ஜினியர்ஸ் நிறுவனம் செய்ய உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயன், எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன், கிழக்கு மண்டல உதவி ஆணையர் ரவிக்குமார், மாநகர பொறியாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED குருந்தமலை அடிவாரத்தில் கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த நபர் கைது