×

தேசூர் போரூராட்சியில் 10 ஆண்டுகளாக அனுமதி இன்றி இணைப்பு வைத்திருந்த குடிநீர் குழாய்கள் துண்டிப்பு அதிகாரிகள் நடவடிக்கை.

வந்தவாசி, பிப்.2: வந்தவாசி அடுத்த தேசூர் போரூராட்சியில் அனுமதி இன்றி  10 வருடங்களாக குடிநீர் குழாய் இணைப்பு வைத்து இருந்தவர்களின் இணைப்பை நேற்று அதிகாரிகள் துண்டித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். வந்தவாசி அடுத்த தேசூர் பேரூராட்சியில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 12 வார்டுகளை கொண்ட இந்த பேரூராட்சியில் 850 குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளது. இதில் மழையூர் சாலையில் உள்ள மேல் நீர் தேக்க தொட்டி மட்டும் 15 கிலோ மீட்டர் தூரம் உள்ள செய்யாற்றில் இருந்து பைப்லைன் மூலமாக தேசூர்-தெள்ளார் கூட்டு குடிநீர் திட்டத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் தண்ணீர் பிடிப்பத்தில் பொதுமக்கள் இடையே முக்கியத்துவம் இருக்கும்.இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக அனுமதி இன்றி குடிநீர் குழாய் அதிக அளவில் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பேருராட்சி உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் போளூர், புதுப்பாளையம் பேரூராட்சி அலுவலர்கள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பிராமணர் தெரு, கெங்கையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 பேர் பேரூராட்சி அனுமதி இன்றி குழாய் இணைப்பு கொடுத்து தாங்களாகவே மெயின் லைன் பைப்பில் இருந்தது இணைத்து இருந்தது தெரிந்தது.இதையடுத்து 4 பேரின் குடிநீர் இணைப்பை இளநிலை உதவியாளர் ரமேஷ், சுகதார மேற்பார்வையாளர் ராமசந்திரன் ஆகியோர் துண்டித்தனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 2008 முதல் பேரூராட்சி செயல் அலுவலராக இருந்தவரிடம் பணம் கொடுத்தாகவும், அதற்கான ரசீது பெறாமல் இருந்ததாகவும் பொதுமக்கள் கூறினார்கள். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தினால் தான் பேரூராட்சியில் அலுவலர்கள் முறைகேடு செய்தார்களா என்பது தெரியவரும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Desur Bureaucracy ,
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...