×

இ-டாய்லெட்டுக்குள் சிக்கிக் கொண்ட சிறுவன் தீயணைப்புத்துறையினர் போராடி மீட்பு

மதுரை, பிப்.1:  மதுரையில் இ-டாய்லெட்டுக்குள் சிக்கிய சிறுவனை தீயணைப்புத்துறையினர் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் தனது மகன் ராஜபாண்டிசேகருடன் பெரியார் பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தார். அங்கு வேலை முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பஸ்சில் ஏறி திருப்பரங்குன்றத்திற்கு புறப்பட தயாரானார். பெரியார்பஸ்ஸ்டாண்ட் மூடுவது குறித்து இழுபறி நீடித்து வந்ததால் திருப்பரங்குன்றத்திற்கு செல்லும் டவுன் பஸ்கள் எங்கு நிற்கும் என்பது தெரியாமல் பெரியார் பஸ்ஸ்டாண்டிற்கும், ஷாப்பிங்காம்பளக்ஸ் பஸ்ஸ்டாண்டிற்கும் நடுவில் உள்ள சாலையில் திண்டாடி நின்றுகொண்டிருந்தார். அப்போது சிறுவன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொன்னதால், அருகில் இருந்த இ-டாய்லெட்டிற்குள் செல்லுமாறு கூறினார். சிறுவனும் இ-டாய்லெட் கதவை திறந்து உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டான். சிறுநீர் கழித்து முடித்ததும் சிறுவனால் கதவை திறக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சிறுவன் சிக்கிக்கொண்டு கதறி அழுதான். பதறிப்போன நாகராஜ், உடனே அருகில் நின்றிருந்த போலீசாரிடம் நடந்த விபரத்தை தெரிவித்தார்.அவர்கள், மைய தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் ஏட்டு அன்புராஜ், தீயணைப்பு வீரர்கள் மூர்த்தி, சுந்தர், வேல்முருகன், ேகாவிந்தராஜ் மற்றும் ஜான்பிரிட்டோ ஆகியோர் தீயணைப்பு வாகனத்தில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்தனர். இ-டாய்லெட் மற்றும் அதன் கதவு ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால்’ செய்யப்பட்டிருந்ததால் எளிதில் கதவை திறக்க முடியவில்லை. இதையடுத்து இரும்பு போன்ற கடினமானவற்றை வெட்டும் திறன் கொண்ட ‘ஹைட்ராலிக் கட்டர்’ இயந்திரம் கொண்டு கதவை தீயணைப்பு வீரர்கள் அறுத்தனர். 15 நிமிட போராட்டத்தில் பூட்டு அறுபட்டு கதவு திறந்து கொண்டது. உள்ளே இருந்த சிறுவனை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Tags : firefighters ,recovery ,
× RELATED 4 ஆண்டுகள் பழனிசாமி ஆட்சி தொடர...