×

மரக்காணம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மரக்காணம், ஜன. 31: மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆத்திக்குப்பம், பாலக்காடு கிராமங்கள். இப்பகுதியைச் சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். இங்குள்ளவர்கள் புதுவை, மரக்காணம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு இவ்வழியாகத்தான் செல்லவேண்டும்.இதுபோல் இப்பகுதியில் விளைகின்ற அனைத்து விவசாய பொருட்களையும் இவ்வழியாகவே எடுத்து சென்று வெளியிடங்களில் விற்பனை செய்யவேண்டும். இப்பகுதிக்கான தார் சாலை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் செலவில் போடப்பட்டுள்ளது இந்த சாலையை மேற்கொண்டு அதிகாரிகள் பராமரிப்பு செய்யவில்லை. இதனால் இச்சாலை தற்போது முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுவதால் வாகன ஓட்டிகள் அனைவரும் பெரும் அவதிப்படும் நிலை உள்ளது.

இது குறித்து இப்பகுதி பொது மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனுகொடுத்தும் இது வரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குறை கூறுகின்ரனர். எனவே, இப்பகுதி பொது மக்களின் நலன் கருதி முற்றிலும் சேதமடைந்துள்ள பாலக்காடு, ஆத்திக்குப்பம் ஊராட்சிகளின் தார்சாலையை உடனடியாக சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : road ,Marakana ,
× RELATED திருச்சி – சிதம்பரம் சாலை பூவளூரில்...