×

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் மறியல்; 41 பேர் கைது

தேன்கனிக்கோட்டை, ஜன.31:  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது. அரசு பொதுத்துறை நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியமர்த்துவதை கைவிட வேண்டும். அரசு பணியிடங்களை ஒழிக்கும் அரசானை 56ஐ ரத்து செய்ய வேண்டும். சமுதாய பாதுகாப்புடன் வேலை, குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது. தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் மறியல் செய்த 41 பேரை கைது செய்தனர்.

Tags : Youth strangers ,state ,governments ,
× RELATED யானை வழித்தடத்தில் உள்ள மின்...