மானூரில் நின்ற பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து

மானூர், ஜன. 31:  மானூர் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கிக் கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்பகுதியில் மற்றொரு அரசு பஸ் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கழுகுமலையிலிருந்து 10 மணியளவில் அரசு பேருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஆயாள்பட்டியைச் சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (43) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை 10 மணியளவில் தங்கராஜ் மானூர் பஸ் ஸ்டாப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்ேபாது களக்குடியிலிருந்து நெல்லை நோக்கி அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. மானூர் ஸ்டாப்பில் ேபருந்தை நிறுத்த டிரைவர் பிரபாகரன் முயன்றுள்ளார். ஆனால் பேருந்து நிற்காமல் ஏற்கனவே நின்று கொண்டிருந்த கழுகுமலை பஸ்சின் பின் பகுதியில் மோதி நின்றது. இதனால் இரண்டு பேருந்துகளிலும் உள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்தது. பயணிகள் தடுமாறி விழுந்ததில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  மானூர் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் எஸ்.ஐ அருண்நாராயணன் ஆகியோர் போக்கு வரத்தை சரி செய்தனர்.

Tags : Government bus crash accident ,bus stand ,Manoor ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு