கடமலைக்குண்டு அருகே வாகனம் மோதி கடமான் பலி

வருசநாடு, ஜன. 30: கடமலைக்குண்டு  அருகே டாணா தோட்டம் மலைப்பகுதியில் தண்ணீருக்காக தனியார் தோட்ட பகுதிக்கு வந்த பெண் கடமான் சாலையில் இறங்கியபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த மான் அதே இடத்தில் துடிதுடித்து  இறந்தது. தகவலைறிந்த கண்டமனூர் வனச்சரகர் குமரேசன், வனவர்  செல்வராஜ் மற்றும் குழுவினர் கால்நடை மருத்துவர் வெயிலான் ஆகியோர் மான்  இறந்த இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட வாகனம்  யாருடையது, எவ்வாறு நடந்தது என்பது பற்றி கண்டமனூர் வனத்துறையினர் தீவிர  விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags : maid ,Kidayalakku ,
× RELATED வாகன சோதனை என்ற பெயரில் வசூலில் கலக்கும் போலீசார்