×

ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும்

ஒட்டன்சத்திரம். ஜன 29: ஒட்டன்சத்திரம் ரயில்வே நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு நேரத்தினை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் மாநகரமாகும். இங்கு புகழ்பெற்ற காய்கறி மார்க்கெட், தயிர் மார்க்கெட் மற்றும் பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் என எண்ணற்றவை உள்ளன. ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக தொன்று தொட்டு வருவதால் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் சென்று வருவர். இவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புவர். ஒட்டன்சத்திரம் தென்னக ரயில்வே நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு அலுவலக நேரம் காலை 8.00 முதல் 12.00 மணி வரையும், மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எனவும், தட்கல் முன்பதிவு காலை 6.30 மற்றும், ஏசி முன்பதிவு காலை 10.00 முதல் 11.00, ஏசி இல்லா முன் பதிவிற்கு காலை 11.00 முதல் 12.00 என குறைந்தளவே உள்ளது. இதனால் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே விவசாயிகள், வியாபாரிகள் நலன் கருதி பயணச் சீட்டு முன்பதிவு நேரத்தினை அதிகரிப்பதோடு மாலை முன்பதிவினை 3.00 மணி முதல் 8.00 மணி வரை கூடுதல் படுத்த வேண்டும். மேலும் திருவனந்தபுரம் - மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் மற்றும் இனிவரவுள்ள அனைத்து ரயில், சிறப்பு ரயில்கள் ஒட்டன்சத்திரம் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ottnancherry Railway Station ,
× RELATED இயற்கை உணவு திருவிழா