நாகர்கோவிலில் நாளை நடக்கிறது குமரி மகா சபா 6வது ஆண்டு விழா உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே சிக்ரி பங்கேற்பு

நாகர்கோவில், ஜன.18:  குமரி மகா சபா 6வது ஆண்டு விழா நாளை 19ம் ேததி (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, நாகர்கோவில் டவர் ஜங்ஷனில் உள்ள ஓட்டல் பயோனியர் கிராண்ட் பேலஸில் வைத்து நடைபெறுகிறது. விழாவிற்கு குமரி மகா சபா நிறுவன தலைவர் ராவின்சன் தலைமை வகிக்கிறார். உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டு ‘சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் ஆட்சி’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். முன்னதாக விழாவில் மது சிக்ரி குத்துவிளக்கு ஏற்றுகிறார். குமரி மகா சபா செயற்குழு தலைவர் தம்பிராஜ் அறிமுக உரை வழங்குகிறார். கவுரவ தலைவர் சொக்கலிங்கம் வரவேற்கிறார். செயலாளர் ஜாண்சன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். குமரி மகா சபாவின் வளர்ச்சி தொடர்பாக துணை தலைவர் சந்திரமோகனும், செயல்திட்டங்கள் குறித்து துணை தலைவர் ஜேசர் ஜெபநேசனும் பேசுகின்றனர்.

சென்னை பிரிவின் தலைவர் சசிகுமார், பெங்களூரு பிரிவின் தலைவர் கோலப்பன் கலந்து கொண்டு பேசுகின்றனர். அதனை தொடர்ந்து வரும் டிசம்பரில் நடைபெற உள்ள ‘குளோபல் குமரியன்ஸ் மீட்’ குறித்து அதன் செயலாளர் ஆஸ்டின் பேசுகிறார்.
விழாவில் விஜயகுமார் எம்பி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மைக்கேல் வேத சிரோமணி, ஜிண்டால் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜ்குமார் உள்ளிட்டோரும் கலந்து கெண்டு பேசுகின்றனர். குமரி மகா சபா பொருளாளர் ஜெய

× RELATED 30க்கும் மேற்பட்டவை சிக்கின...