×

கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தொமுசவினர் 115 பேர் கைது

கரூர், ஜன.10: கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் அருகே தொழிற் சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டத்தில் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.  அனைவருக்கும்  ரேஷன் பொருள், விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தி அத்தியாவசிய பண்டங்களின்  யூக வணிகத்தை தடை செய்ய வேண்டும். விதிவிலக்கின்றி அடிப்படை தொழிலாளர்  சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். முறைசாரா உள்ளிட்ட அனைத்து  தொழிலாளர்களுக்கும் சமூக பாதுகாப்பினை  உறுதிப்படுத்த வேண்டும்.பொதுத்துறை  நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை ரத்து செய்ய வேண்டும். மோட்டார்  வாகன சட்டதிருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் கரூர் மாவட்ட  தொழிற்சங்கத்தினர் நேற்று 2வது நாளாக ஈடுபட்டனர்.

கரூர் ஆர்எம்எஸ்  அலுவலகம் அருகே நடை பெற்ற போராட்டத்திற்கு அண்ணாவேலு, முருகேசன்,  பழனிச்சாமி, நடராஜன், ஆனந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்பாசாமி,  பால்ராஜ், பாலசுப்பிரமணி, ஜீவானந்தம், வடிவேலன், மோகன், குணாளன் உள்ளிட்ட  நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர், பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 115  பேரை டவுண் போலீசார் கைது செய்தனர். மஸ்தூர் யூனியன்: சதர்ன் ரயில்வே  மஸ்தூர் யூனியன் சேலம் கோட்டம் கரூர் கிளை தொழிற்சங்கத்தினர் நேற்று கரூர்  ரயில்நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறைந்தபட்ச சம்பளம்,  தொழிலாளர் களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். கேரண்டியுடன் கூடிய  பென்சன், குடும்ப பென்சன் வழங்க வேண்டும்.

அனைத்து காலிப்பணியிடங்களை  நிரப்பிட வேண்டும். தனியார் மய முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் ரமேஷ்  தலைமை வகித்தார். கிளை தலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்; பணமதிப்பிழப்பு,  ஜிஎஸ்டியால் தொழில் முடங்கி வேலைவாய்ப்பு பறிபோய் விட்டதை கண்டித்தும்,  எல்ஐசி நிறுவனத்தை பாதுகாக்கக் கோரி காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தினர்    நேற்று 2வது நாளாக வேலை நிறுத்தம் செய்தனர். கரூர் கிளை2 முன் விளக்க  கூட்டம் நடைபெற்றது. காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட  துணைத்தலைவர் கணேசன், தலைமை வகித்தார். அரசு ஊழியர்சங்க நிர்வாகிகள்  சுப்பிரமணியன், சக்திவேல், வங்கி ஊழியர் சங்கம் வெங்கடேசன், தமிழ்நாடு  ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சகிலா, மற்றம் ஜெயராஜ், மோகன்குமார்  பேசினர். காப்பீட்டுக்கழக சங்கம் பெருமாள் நன்றி கூறினார்.

Tags : office ,Karur RMS ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...