×

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ₹17.33 லட்சம் மதிப்பில் தானியங்கள் கொள்முதல்

கள்ளக்குறிச்சி, ஜன. 8:    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், கச்சிராயபாளையம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தானியங்களை விற்பனைக்கு எடுத்து வந்து விற்பனை செய்து வருகிறார்கள். நேற்று 216 விவசாயிகள் 500 மூட்டை விற்பனைக்கு தானியங்களை எடுத்து வந்தனர். அதில் 200 மூட்டை மக்காச்சோளம், 250 மூட்டை உளுந்து, 15 மூட்டை மணிலா மற்றும் கம்பு, எள்ளு, பச்சைபயிறு, வரகு, ராகி உள்ளிட்ட தானியங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதனை ஆத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வாங்கி சென்றனர்.    
100 கிலோ எடைகொண்ட மக்காச்சோளம் ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.1509க்கும், அதிகபட்சமாக ரூ.1769க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மணிலா ஒரு மூட்டை குறைந்தபட்சம் ரூ.5199க்கும், அதிகபட்சமாக ரூ.5529க்கும் விற்பனை செய்யப்பட்டது. உளுந்து ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.4869க்கும், அதிகபட்சமாக ரூ.5196க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் தானியங்கள் வரத்து அதிகரித்தது.
 நேற்று ஒரு நாளில் மட்டும் பல்வேறு தானியங்கள் ரூ.17லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டதாக கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைகூட கண்காணிப்பாளர் கலைச்செல்வி தெரிவித்தார்.


Tags : Kallakurichi Market Committee ,
× RELATED கள்ளக்குறிச்சி மார்க்கெட்...