×

திண்டிவனத்தில் இருந்து வர காலதாமதம் : மயிலம் பகுதியில் தீயணைப்பு நிலையம்

மயிலம்,  ஜன. 8:  மயிலம் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில்  தீவனுார், வெங்கந்தூர், ரெட்டணை, பெரியதச்சூர், வீடூர், பாதிராபுலியூர், கூட்டேரிப்பட்டு, அவ்வையார் குப்பம்  உட்பட 47 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன.  மேலும் வானூர் தாலுகாவில்  பெரும்பாக்கம், பரிக்கல்பட்டு, குன்னம், பொம்பூர், மரக்காணம் ஒன்றியத்தை சேர்ந்த கீழ்எடையாளம், கருணாவூர்,  அன்னம்புத்தூர், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தென்புத்தூர், தளவாளப்பட்டு, மரூர் உட்பட பல கிராமங்கள்  உள்ளன. மேற்கண்ட ஒன்றியத்திலுள்ள கிராமங்களில் பெரும்பாலான வீடுகள் கூரைகளால் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள கிராமங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
 இதனால் கூரை  வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து விடுகிறது. கரும்பு தோட்டம், சவுக்கு தோப்பு, வைக்கோல் போர் போன்றவைகள் தீ பிடித்துக்கொண்டால் அணைப்பதற்கு திண்டிவனத்திலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து செல்கிறது. மயிலம் பகுதியில் பெரும்பாலான கிராமங்கள் திண்டிவனத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளதால் விபத்து காலங்களில் வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலான பிறகு தீயணைப்பு வாகனம் வரும் அவல நிலை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் திடீரென ஏற்படும் சாலை விபத்துக்களுக்கு முதலுதவி கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி மயிலத்தில் தீயணைப்பு நிலையம்   அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tindivanam: Fire Station ,area ,Mayilam ,
× RELATED நெல்லையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது