×

11 நாட்களுக்குப்பின் போராட்டம் முடிவுக்கு வந்தது தெற்குசத்திரம் டாஸ்மாக் கடையை 2 மாதத்திற்குள் அகற்ற ஆர்டிஓ உறுதி

சிவகிரி, ஜன.4: தெற்குசத்திரம் டாஸ்மாக் கடையை 2 மாதத்திற்குள் அகற்ற ஆர்டிஓ உறுதியளித்ததை தொடர்ந்து 11 நாட்களாக நடந்த போராட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. சிவகிரி அருகே தெற்குசத்திரத்தில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையில் கடந்த அக்.18ம் தேதி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு தெற்குச்சத்திரம், வடக்குச்சத்திரம் மற்றும் வடுகப்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அக்.20ம்தேதி மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உத்தரவாதத்தின்படி கடை மூடப்படாததால் அக்.24 முதல் கிராம மக்கள் டாஸ்மாக் கடை அருகில் போராட்டம் நடத்தினர். கடையை அகற்ற வலியுறுத்தி கலெக்டர், எம்எல்ஏ உள்ளிட்டோரிடம் மனுவும் அளித்தனர். 10 நாட்களாக போராட்டம் தொடர்ந்த நிலையில் போராட்டக்குழு தலைவர் இசை மதிவாணன், வடுகபட்டி கிருஷ்ணகனி ஆகியோர் நேற்று முன்தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினர். ந்நிலையில் நேற்று தென்காசி ஆர்டிஓ சவுந்தர்ராஜன், சிவகிரி தாசில்தார் செல்வசுந்தரி, வருவாய் ஆய்வாளர் சாமி, டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 மாதத்திற்குள் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்தர். இதையடுத்து  ஆர்டிஓ, தாசில்தார், இசை மதிவாணன், கிருஷ்ணகனி ஆகியோருக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதுகுறித்து இசை மதிவாணன் கூறுகையில், ஏழைகளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கக்கூடிய டாஸ்மாக் கடையை 2 மாதத்திற்குள் அகற்றப்படும் என ஆர்டிஓ உத்தரவாதம் அளித்தார். இதையேற்று போராட்டத்தை கைவிட இசைவு தெரிவித்துள்ளோம் என்றார்.

Tags : fight ,shop ,RDO ,Tasmag ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி