×

சேடபட்டி அருகே கண்மாயில் மேய்ச்சலில் இருந்த 8 வெள்ளாடுகள் சாவு

பேரையூர், ஜன. 4: சேடப்பட்டி அருகே கண்மாயில் மேய்யச்சலில் இருந்த 8 வெள்ளாடுகள் திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்து இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது காளப்பன்பட்டி. இந்த கிராமத்தின் அருகிலுள்ள காளப்பன்பட்டி கண்மாய்க்குள் வெள்ளாடுகள் நேற்று மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது காளப்பன்பட்டியைச் சேர்ந்த லெட்சுமி என்பவரது 3 வெள்ளாடுகளும், இதே ஊரைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரது 4 வெள்ளாடுகளும், ஊசிபாலு ஒச்சம்மாள் என்பவரின் ஒரு வெள்ளாடும் திடீரென வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து உரியிழந்தன.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆடு மேய்ப்பவர்கள் எந்த நோயும் தாக்கி ஆடுகள் இறக்க வில்லை. விஷம் கலந்த இரையை தின்றதால்தான் இறந்து விட்டது என்று வேதனையடைந்தனர்.லெட்சுமி கூறும்போது, ‘ஆடு மேய்ப்பதை தவிர வேறு தொழில் தெரியாது. வாயில்லாத ஜீவனை அநியாயமாக கொன்னுட்டாங்க’ என்றார். இதுகுறித்து ஆடு வளர்த்தவர்கள் காவல்நிலையத்தில் இதுவரை புகார் எதுவும் கொடுக்க வில்லை என தெரிகிறது. இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : floods ,grazing area ,Sedapatti ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி