×

ஜலகண்டாபுரம் அருகே மந்தகதியில் நடக்கும் சாலை பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை

ஜலகண்டாபுரம், ஜன.3: ஜலகண்டாபுரம் அருகே ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணியால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஜலகண்டாபுரத்தை அடுத்த ஆவடத்தூர் கிராமம், கட்டிநாயக்கன்பட்டியில் இருந்து சவுரியூர் செல்லும் சுமார் ஒரு கி.மீ தொலைவுக்கு பிரதான தார்சாலை கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.  இதையடுத்து, சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்கும் பொருட்டு, ஒரு மாதத்திற்கு முன் பொக்லைன் மூலம் ஜல்லிகள் தோண்டப்பட்டு புதிய சாலை அமைப்பதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால், ஜல்லி கொட்டப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இது வரை சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் சவுரியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், அவசர காலங்களில் அவ்வழியாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,downtown area ,Jalakandapuram ,
× RELATED சாலைகளில் திரியும் மாடுகளால்...