×

பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கடையடைப்பு போராட்டம்

விழுப்புரம், ஜன. 3: பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டம் கொண்டு வருவதை எதிர்த்து விழுப்புரத்தில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டம் கொண்டு வருவதை எதிர்த்தும், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த வலியுறுத்தியும், குறு, சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி, தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டம் துவங்கியது.இதனையொட்டி விழுப்புரத்தில் எம்.ஜி ரோடு, பாகர்ஷா வீதி, காமராஜர் வீதி, நேருஜி சாலை, ரெட்டியார் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 22 கடைகளைச் சேர்ந்த குறு, சிறு வணிகர்கள் கடைகளை பூட்டி காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல் விழுப்புரம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தை சேர்ந்த குறு, சிறு வணிகர்கள் கடைகளை பூட்டி போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Tags : Plastics manufacturers ,
× RELATED பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க கால...