×

போலீஸ் பாதுகாப்பு கோரி எஸ்பியிடம் பொதுமக்கள் மனு

விழுப்புரம், டிச. 28: விழுப்புரம் அருகே தொரவி காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எஸ்பி ஜெயக்குமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் வசிக்கும் ஆதிதிராவிடர் பகுதியைச் சேர்ந்த வாலிபரும், ஊர் பகுதியை சேர்ந்த பெண்ணும் காதலித்து ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இதனால் கடந்த 24ம் தேதி ஊர் தரப்பில் அம்மன்கோயிலில் கூட்டம் போட்டு வீட்டுக்கு ஒரு ஆள் வரவழைத்து பேசினார்கள். கூட்டத்தில் இனிமேல், ஆதிதிராவிடர் மக்களோடு பேசக்
கூடாது. விவசாய வேலைக்கு அழைக்கக்கூடாது. மேலும் குடிநீர் வழங்கக்கூடாது. மின்விளக்கு வசதியில்லாமல் செய்ய வேண்டும். இரவு நேரத்தில் காலனி பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என திட்டம் தீட்டி வருவது தெரியவந்துள்ளது.
அதன்படி சம்பவத்தன்று இரவு தெருவிளக்கை நிறுத்திவிட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வலம் வந்தார்கள். இதனைத்தொடர்ந்து எங்கள் பகுதிமக்கள் அச்சத்துடன் விக்கிரவாண்டி காவல்நிலையத்தை ெதாடர்புகொண்டு உரிய பாதுகாப்பு வழங்க கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து போலீசார் எங்கள் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புத்தாண்டு, பொங்கல் பண்டிகையின்போது மஞ்சு விரட்டு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த நேரத்தில் மோதல் சூழ்நிலை ஏற்படும் நிலை உள்ளதால் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.



Tags : SPP ,
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்