×

சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை ராணிப்பேட்டையில் பரபரப்பு

ராணிப்பேட்டை, டிச. 20: சாலை ஆக்கிரமிப்பை கண்டித்து ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த சீக்கராஜபுரம், நர்சிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் நர்சிங்கபுரம், தென்றல் நகர் லாடத்தெரு ஆகிய பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த தனிநபர்கள் 8 பேர் இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அதுமட்டுமின்றி கடந்த 6 மாதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து இப்பகுதியில் முள்வேலி அமைத்துள்ளனர்.

மேலும் அரசு அமைத்துள்ள மின்கம்பங்கள், குடிநீர் குழாய்கள் வழியாக இணைப்பு சாலை செய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் கலெக்டர், டிஆர்ஓ, ராணிப்பேட்டை எம்எல்ஏ, வாலாஜா பிடிஓ, நர்சிங்கபுரம், சீக்கராஜபுரம் கிராம நிர்வாக அலுவலர்கள், சிப்காட் காவல் துறை ஆகியோருக்கு ஏற்கனவே மனு அளித்தனராம். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ராணிப்பேட்டை ஆர்டிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் இதுதொடர்பாக மனு அளித்தனர். அதில், ‘எங்கள் பகுதிக்கு இணைப்பு சாலை வேண்டும். இல்லையென்றால் ஓரிருநாளில் சாலை மறியல் செய்வோம்’ என தெரிவித்து இருந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : queen ,RTO Office ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!