×

பாஜ ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, டிச.19: தர்மபுரி சட்டமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நல்லம்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் பழனிசாமி வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் சரவணன், செல்லப்பாண்டியன், சரவணன், வெங்கட்ராஜ் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் புரட்சி கவிதாசன், நாடாளுமன்ற தொகுதி அமைப்பாளர் வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தர்மபுரி நகர தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தலில், தர்மபுரி தொகுதியில் பாஜ வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவது, வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் பணிக்கு தயாராக வேண்டும், புதிய வாக்குகள் பெறுவதற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Bhaj Advani ,meeting ,
× RELATED வீட்டுமனை பட்டா வழங்குவதில் உள்ள...