×

வைகுண்ட ஏகாதசி விழா அரியலூர் கோதண்ட ராமசாமி பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

அரியலூர்,டிச,19:  அரியலூர் கோதண்டராமசாமி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பரமபத சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சீனிவாசப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரியலூர் பெருமாள் கோயில் தெருவில் உள்ள  ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி கோயிலில் பரமபத வாசல் திறப்புவிழாவை முன்னிட்டு, நம்பெருமாள் எழுந்தருளி, பரமபதவாசல் திறப்பு மற்றும் ஆழ்வாராதிகள் மோட்சம் சேவை நடைபெற்றது. மூலவர் சன்னதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வெங்கடேசப்பெருமாள் ஊர்வலமாக சொர்க்கவாசல்  முன்எழுந்தருளினார். அங்கு பெருமாளுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் சொர்க்கவாசல் கதவுதிறந்து ஸ்ரீசீனிவாசப்பெருமாள் நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாக எழுந்தருளி ஸ்ரீசீளிவாப்பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷமிட்டு சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை தரிசித்தனர். பின்னர் பொதுமக்களும் சொர்க்கவாசல் வழியாக வந்து இறைவனின் அருளாசி பெற்றனர். பின்னர் மேளதாளங்கள் முழங்க நம்மாழ்வாருடன், சீனிவாசப்பெருமாள் வீதியுலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Vaikuntha Ekadasi Festival Ariyalur Gotthana Ramasamy Perumal Temple Opening Paradise ,
× RELATED பெரம்பலூர் நகராட்சியில்...