காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நீடிப்பு விஏஓக்கள் ஊர்வலமாக சென்று டிஆர்ஓவிடம் மனு

பெரம்பலூர்,டிச.19:  தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மனுகொடுத்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கிராம நிர்வாக அலு வலர்கள் செய்து வரும் கணினிவழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத் தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும். விஏஓ பணியிடத்திற்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், நேற்று பெரம் பலூர் நகராட்சி அலுவலகத்திலிருந்து சங்க மாவட்டத்தலைவர் ராஜா தலைமையில் அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமியிடம் கோரிக்கை அடங்கிய மனு கொடுத்தனர்.

Related Stories:

>