×

திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச அனிமேஷன் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, டிச.16: திருவண்ணாமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இலவச அனிமேஷன் பயிற்சி, இலக்க புகைப்பட பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் நேற்று தெரிவித்தார்.திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பிசிவி-டிஜிட்டல் நான் (லீனியர்) எடிட்டிங்-டிஎன்எல்இ, ஏவிஐடி-டிஜிட்டல், நான் (லீனியர்) எடிட்டிங்-டிஎன்எல்இ, பல்லூடக பயிற்சி, இலக்க புகைப்பட பயிற்சி, ஆடியோ இன்ஜினியரிங், அனிமேஷன் போன்ற பயிற்சிகள் கை, கால் பாதிக்கப்பட்ட (40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை) உள்ள மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள், மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கான உதவித்தொகை ₹1000 மாற்றுத்திறனாளிக்கு வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியினை பெற விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 40 வரை வயதுடையவராகவும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கல்வி தகுதி சான்று, புகைப்படம் 2, தொலைபேசி எண் ஆகியவற்றை இணைத்து திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Distributors ,Tiruvannamalai ,
× RELATED அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான...