மாமாங்கம் பஸ் ஸ்டாப் அருகே செல்வி மெஸ்சின் புதிய கிளை திறப்பு

சேலம், டிச.11: சேலத்தில் செல்வி மெஸ்சின் புதிய கிளை தொடக்க விழா நாளை(12ம் தேதி) நடக்கிறது. சேலத்தில் பல கிளைகளை வெற்றிகரமாக நடத்தி வரும் செல்வி மெஸ் பிஎல்.பழனிசாமி, மேலும் ஒரு புதிய கிளையை துவக்குகிறார். சேலம்-பெங்களூரு பைபாஸ் சாலை எஸ்.கே.எஸ் கார்ஸ் ஷோரூம் முன், மாமாங்கம் பஸ் ஸ்டாப் அருகே, செல்வி மெஸ் அசைவம், சேலம் கேப் சைவம் என்ற பெயரில் புதிய கிளை தொடங்கப்படுகிறது. தொடக்க விழா கோவை அன்னபூர்ணா குரூப் தாமோதரசாமி நாயுடுவின் நல்லாசியுடன் நாளை (12ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கணபதி ஹோமம், லட்சுமி, சரஸ்வதி பூஜையுடன் நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஓட்டல் சங்க தலைவர் சண்முகம் வரவேற்கிறார்.

தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கடசுப்பு, செயலாளர் சீனிவாசன், பொருளாளர் கணேசன், துணைத்தலைவர் சீனிவாச ராஜா, தமிழ்நாடு யாதவர் பேரவை தலைவர் கண்ணன், ஆர்கே மருத்துவமனை ஆர்கே ராஜூ, டாக்டர் (டீன்) மோகன், லண்டன் ஆர்த்தோ மருத்துவமனை டாக்டர்கள் சுகவனம், சேகர், புதுக்கோட்டை ஓட்டல் சங்க தலைவர் சண்முக பழனியப்பன், கவுரவ தலைவர் மாணிக்கம், கோவை அன்னபூர்ணா குரூப் சீனிவாசன், சேலம் ஓட்டல் அன்னபூர்ணா ஜெய் பாரத் (எ) பாபு, சாரதி ஓட்டல் குரூப் தண்டாயுதம், சரவணபவன் குரூப் சிவராமன், லட்சுமி ஓட்டல் குரூப் தரன், ஏஎம்ஆர் குரூப்ஸ் நிறுவனர் சுமங்கலீ ஆறுமுகம், ஓமலூர் முரளி கேப் பாலன், சந்திரா கேப் நாராயணன், வழக்கறிஞர் குணசேகரன், இன்ஜினியர் கோவிந்தராஜ் ஆகியோர் குத்துவிளக்கை ஏற்றியும், விற்பனையை தொடங்கி வைக்கின்றனர். செல்வி மெஸ் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் பிஎல் பழனிசாமி ஏற்புரை நிகழ்த்துகிறார். செல்வி மெஸ் நிர்வாக பங்குதாரர் சுப்பிரமணி நன்றி கூறுகிறார்.

Tags : Messi ,opening ,branch ,bus stop ,Mamangam ,
× RELATED தமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல்...