×

காரிமங்கலம் அருகே திமுகவினருக்கு உறுப்பினர் அட்டைகள்

காரிமங்கலம், டிச.7: காரிமங்கலம் அருகே வெள்ளிசந்தையில், ஒன்றிய திமுக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அப்துல்லா ஆகியோர், உறுப்பினர் அட்டைகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், பொதுக்குழு உறுப்பினர் சண்முகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் மணி, முன்னாள் ஒன்றிய நிர்வாகிகள் தீர்த்தகிரி, மாதேஸ்வரன், வரதராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் குமார், மாணவர் அணி துணை அமைப்பாளர் தமிழரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் மாதப்பன், கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தனக்கோடி, முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் மாரவாடி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Calimangalam ,
× RELATED திமுக ஆலோசனைக் கூட்டம்