×

திமுக ஆலோசனைக் கூட்டம்

 

வடமதுரை, மே 26: வடமதுரை ஒன்றிய திமுக சார்பில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், திமுக புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வடமதுரை ஒன்றிய கழகச் செயலாளர் (மேற்கு) சுப்பையன், வடமதுரை ஒன்றிய பொறுப்பாளர் (கிழக்கு) பாண்டி, வடமதுரை பேரூர் கழகச் செயலாளர் கணேசன், அய்யலூர் பேரூர் கழகச் செயலாளர் மற்றும் பேரூராட்சி தலைவர் கருப்பன் மற்றும் வடமதுரை ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vadamadurai ,Vadamadurai Union DMK ,Vadamadurai Railway Station Road ,Dinakaran ,
× RELATED வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்