×

காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

நாகர்கோவில், டிச. 5:  காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரையும், கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரையும் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் வழியாக பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் இந்த சாலைகள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். காவல்கிணறு முதல் பார்வதிபுரம் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை கடந்த இரு வடத்திற்கு முன்பு போடப்பட்டது. ஆனால் இந்த சாலையில் பல இடங்களில் தற்போது பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

 ஆரல்வாய்மொழி, தோவாளை, விசுவாசபுரம், வெள்ளமடம், நாக்கால்மடம் உள்பட பல இடங்களில் சாலைகள் சேதமாகியுள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் சாலையில் சேதமான பள்ளத்தில் சிக்கும் நிலை இருந்து வருகிறது. பைக்கில் வருபவர்கள் பள்ளத்தில் விழுகின்றனர்.   இந்த சாலை கடந்த சில வருடத்திற்கு முன்பு குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பல அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தியது.

அதனை தொடர்ந்து கடந்த 2 வருடத்திற்கு முன்பு இந்த சாலை செப்பனிடப்பட்டது. இந்நிலையில் சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை பேட்ஜ் ஒர்க் மூலம் சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags : crash motorists ,highway ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!