×

மாணவன் தற்கொலை குறித்து ஆசிரியர்களிடம் சிஇஓ விசாரணை

காரிமங்கலம், டிச.5: காரிமங்கலத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து, அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்த சிக்கதிம்மனஅள்ளியை சேர்ந்த தொழிலாளியின் மகன் கார்த்திக்(15), சிறப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்கு ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாணவனின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து ேபாராட்டம் நடத்தினர். இது குறித்து காரிமங்கலம் ேபாலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாணவன் தற்கொலைக்கு காரணமான 2ஆசிரியர்களும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, இச்சம்பவம் குறித்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதேபோல மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி முருகானந்தம், பள்ளி மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.

Tags : CEO ,student suicide ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...