×

பெண்ணை தாக்கியவர் கைது

முஷ்ணம், நவ. 30:  முஷ்ணம் அருகே நகரப்பாடி கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மனைவி பழனியம்மாள்(35). இவர் அதே பகுதியில் உள்ள ஒருவர் நிலத்தில் பயிர் செய்து வந்தார். இந்நிலையில் அன்பழகன்(48) என்பவர் நிலத்தை உரிமையாளரிடம் இருந்து கிரையம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து நிலத்தை காலி செய்ய சொல்லி அன்பழகன் பழனியம்மாளை திட்டி தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த பழனியம்மாள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து முஷ்ணம் காவல் நிலையத்தில் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து அன்பழகனை கைது செய்தனர்.

Tags : attacker ,
× RELATED பந்தலூர் அருகே யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதி