×

குளிர்பான கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

புவனகிரி, ஜூன் 4: புவனகிரி அடுத்த கீரப்பாளையம் மெயின்ரோட்டில் கூல்டிரிங்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். நேற்று காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள், உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

The post குளிர்பான கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Bhubaneswar ,Coolrings ,Keerapalayam ,Dinakaran ,
× RELATED ஒடிசா மாநிலம் பாலசோரில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்